61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் பழையாறு மீனவர்கள் ஏமாற்றம்


61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் பழையாறு மீனவர்கள் ஏமாற்றம்
x

61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் பழையாறு மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:-

61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் பழையாறு மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பழையாறு மீன்பிடி துறைமுகம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்து உள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரம் மீனவர்கள் 350 விசைப்படகு, மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு மீன் மற்றும் உலர் கருவாடு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு நேற்று பழையாறு துறைமுகத்துக்கு திரும்பி வந்தனர்.

மீனவர்கள் ஏமாற்றம்

இந்த நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்த பகுதியில் பிடிபடும் மத்தி மீன்களுக்கு சந்தைகளில் அதிக வரவேற்பு உண்டு. ஆனால் தற்போது மத்தி மீன்கள் குறைவான அளவில் பிடிபட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு சென்றோம். ஆனால் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை. சிறிய வகையான மீன்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்த மீன்கள் கருவாட்டுக்கு மட்டுமே பயன்படும்.

நஷ்டம்

வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மீன்களான பாறை, மத்தி உள்ளிட்ட மீன்கள் கிடைக்கவில்லை. வருமானமும் இல்லை. விசைப்படகுகளுக்கு டீசல், கூலி செலவு உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவில் செலவு செய்த எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.


Next Story