மீனவர்கள் வேலைநிறுத்தம்


மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 150 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 150 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

5 மீனவர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் மண்டபத்தை சேர்ந்த பாரம்பரிய மீனவர்களில் ஒரு பகுதியினர் சங்கம் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இதுபோல் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்தொழில் செய்துவிட்டு அதன் பிறகு அவர்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம்.

அதன்படி மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து சென்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது தங்கச்சிமடம், உச்சிப்புளியை சேர்ந்த மீனவர்கள் உள்பட 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை இலங்கை ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

மீனவர்கள் வேலை நிறுத்தம்

இந்த நிலையில் கைதான மீனவர்களை விடுவிக்க கோரி மண்டபத்தில் மீன்பிடி தொழில் செய்யும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கோவில்வாடி மீனவர்கள் சங்கத்தினர் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 150 விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Related Tags :
Next Story