மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம்


மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம்
x

மாண்டஸ் புயல் காரணமாக 7 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

மாண்டஸ் புயல் காரணமாக 7 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம் அடைந்தனர்.

7 நாட்களுக்கு பிறகு சென்றனர்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. புயல் கரையை கடந்ததால் 7 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

குறைந்த அளவு மீன்கள் சிக்கின

இந்த நிலையில் மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். 7 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவுமீன்கள் சிக்கியதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.ேகாடியக்கரையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் நேற்று குறைந்த அளவே மீன்கள் கிடைத்ததால் குறைந்த அளவு வியாயாரிகளே வந்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை வெறிச்சோடி கிடந்தது. மீன்கள் அதிகம் கிடைக்காததால் கருவாடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:- மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 7 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் மூடங்கி கிடந்தோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

புயல் கரையை கடந்ததால் 7 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றோம். அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றோம். ஆனால் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கியதால் ஏமாற்றத்துடன் கரை திரும்பி உள்ளோம்.

பெரும் நஷ்டம்

சீசன் காலங்களில் நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 டன் மீன்கள் சிக்கி வந்த நிலையில் நேற்று கோடியக்கரையில் ஒட்டுமொத்தமாக ஒரு டன் மீன்கள் மட்டுமே கிடைத்தன. டீசல் மற்றும் ஆள்கூலிக்கு கூட மீன்கள் கிடைக்காததால் பெரும் நஷ்டம் அடைந்து உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

1 More update

Next Story