விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது


விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது
x

விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 15-ந்ேததி முதல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது.

கோரிக்கை நிராகரிப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் இந்த ஆண்டு மீன் வருவாய் இன்றியும், டீசல் விலை உயர்வாலும் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலத்தை வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அடுத்தமாதம் 15-ந்தேதி வரை ஒரு மாதமும், இயற்கை சீற்றம் ஏற்படும் நவம்பர் முதல் டிசம்பர் வரை ஒரு மாதமும் 2 தடவையாக மாற்றியமைக்க வேண்டும். இல்லையெனில் தடைக்காலத்தை 45 நாட்களாக குறைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது

மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் மீன் இனப்பெருக்க காலம் என கூறி வருகிற 15-ந்தேதி முதல் வருகிற ஜூன் 14-ந்தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி முதல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இதையடுத்து கலெக்டர் மற்றும் மீன்வளத்துறையினர் மீனவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.


Next Story