20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா


20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா
x

தோகைமலை அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மீன்பிடி திருவிழா

கரூர்

மீன்பிடி திருவிழா

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நாக்காகுளம் உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் குளம் நிரம்பாமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்தது. இதனால் நாக்காகுளம் நிரம்பி வழிந்து கடைமடை வரை தண்ணீர் சென்றது. பின்னர் விவசாயிகள் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.இதனால் குளத்தில் நீர்மட்டம் குறைந்து மீன்கள் வளர ஆரம்பித்தது. இதையடுத்து குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த ஊர் நாட்டாமை மற்றும் முக்கியஸ்தர்கள் முடிவு செய்து நேற்று முன்தினம் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

இதையடுத்து நேற்று காலை ஊர் நாட்டாமை குளத்தின் கரையில் இருந்து வெள்ளைத்துண்டை வீசி மீன்பிடித்திருவிழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏராளமான பொதுமக்கள், மீன்பிடி வீரர்கள் ஆர்வத்துடன் குளத்தில் இறங்கி வலை மற்றும் கொசு வலைகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பல்வேறு வகையான மீன்களை பிடித்து சென்றனர்.20 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடித்திருவிழா நடந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story