ஏரியில் மீன்பிடி திருவிழா
ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது.
திருச்சி
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஏரி, ஜம்பேரியை நீராதாரமாக கொண்டு, சுமார் 400 ஏக்கர் பரப்பளவிற்கு பாசன வசதியளிக்கிறது. ஜம்பேரியின் நீர் வரத்து குறைந்ததால், இந்த ஏரியில் நீர் வற்றும் நிலை ஏற்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டை கருதி, ஏரியில் உள்ள மீன்களை பிடிக்க, ஊராட்சி நிர்வாகம் நேற்று காலை 8 மணியளவில் மீன்பிடி திருவிழா நடத்துவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் மீன்பிடி வலை முதலான கருவிகளுடன் திரளாக வந்து குவிந்தனர். பின்னர் ஏரியில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். மீன் வளம் மிக்க இந்த ஏரியில் கெண்டை, விரால், அயிரை, கெளுத்தி, ஆறா முதலான மீன்கள் பிடிபட்டன. பொதுமக்கள் பிடிபட்ட மீன்களுடன் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
Related Tags :
Next Story