திருமயம் அருகே மீன்பிடி திருவிழா


திருமயம் அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சீராத்தங்குடி கிராமத்தில் உள்ள கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி திருவிழா நேற்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. இதில் நத்தம், பூலாம்குறிச்சி, பொன்னமராவதி, மணப்பாறை, திண்டுக்கல், திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு ஊத்தாவை வைத்து மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, விரால், கெண்டை, கெளுத்தி, ஜிலேபி ஆகிய மீன்கள் கிடைத்தது. பிடித்த மீன்களை இளைஞர்கள் ஆர்வமுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்று சமையல் செய்து சாப்பிட்டனர்.

1 More update

Next Story