தங்கப்பதக்கம் வென்ற சிவகங்கை மாணவிகள்
தங்கப்பதக்கம் வென்ற சிவகங்கை மாணவிகளுக்கு கலெக்டர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
சிவகங்கை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த 18 விளையாட்டு வீராங்கனைகள் மாநில அளவில் சென்னையில் கடந்த 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெற்ற வளைகோல் பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று, சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதையொட்டி சிவகங்கை வந்த அந்த வீராங்கனைகளுக்கு சிவகங்கை பஸ் நிலையத்தில், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ்கண்ணன், சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரைஆனந்த், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர் மன்ற உறுப்பினர்கள், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து, தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.