சுதந்திர தினவிழா கொடியேற்றம்
சுதந்திர தினவிழா கொடியேற்றம் நடந்தது.
திருப்புவனம்,
சுதந்திர தினத்தையொட்டி திருப்புவனத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நீதிபதி குருலெட்சுமி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் அரசு வக்கீல், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் சின்னையா கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் துணைச்சேர்மன் மூர்த்தி, ஆணையாளர் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் அருள்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேங்கைமாறன் கொடி ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மடப்புரம் ஊராட்சி மன்றத்தில் தலைவர் சபர்மதிபாலபோதகுரு கொடியேற்றினார். துணைத்தலைவர் காளீஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கீழடி ஊராட்சியில் தலைவர் வெங்கடசுப்பிரமணியன் கொடியேற்றினார். துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கொந்தகை ஊராட்சியில் தலைவர் தீபலெட்சுமி ஜெயவேல் கொடியேற்றி னார். துணைத் தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொட்டப்பாளையம் ஊராட்சியில் தலைவர் குழந்தைபிச்சை கொடியேற்றினார். துணைத் தலைவர் செண்பகவள்ளி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புலியூர்-சாய்னாபுரம் ஊராட்சியில் தலைவர் ரவி கொடி யேற்றினார். துணைத் தலைவர் முருகன் மற்றும் உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். அல்லிநகரம் ஊராட்சியில் தலைவர் இந்திராகாந்திசூரப்பராசு கொடியேற்றினார். திருப்பாச்சேத்தியில் ஊராட்சியில் தலைவர் ராமு, துணைத் தலைவர் சோணைமுத்து மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மணலூர் ஊராட்சியில் தலைவர் அரசிமுருகன் கொடியேற்றினார். துணைத்தலைவர் ராஜலெட்சுமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கே.பெத்தானேந்தல் ஊராட்சியில் தலைவர் ராமேஸ்வரி முனியாண்டி கொடி யேற்றினார். துணைத்தலைவர் கோபி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிரங்குளம் ஊராட்சியில் தலைவர் மல்லிகா ராஜாமணி கொடியேற்றினார். துணைத்தலைவர் அய்யம்மாள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தலைவர் சேங்கைமாறன் கொடியேற்றி னார். துணைப் பதிவாளர் செல்வம், முதுநிலை ஆய்வாளர் ராமச்சந்திரன், சங்க செயலாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் கொடியேற்றி னார். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் டாக்டர் ஸ்டீபன் தனபால் கொடியேற்றினார்.