தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றம்


தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 25 Feb 2023 7:00 PM GMT (Updated: 25 Feb 2023 7:00 PM GMT)

தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் உள்ள சையது ஷா குலாம் மொய்தீன் சுத்தாரி ஒலியுல்லா தர்காவில் 218-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தைக்காலில் பல்வேறு வீதிகள் வழியாக குதிரை மீது கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விழாவில் கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி, அரசூர், திருமுல்லைவாசல், புதுப்பட்டினம், மாங்கனாம்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தர்காவில் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்காவின் பரம்பரை டிரஸ்டி மற்றும் முத்தவல்லி சையத் முர்துஸா பாஷா, கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.


Next Story