சேலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
சேலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேலம்
சேலம்,
சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேலம் மறை மாவட்ட முதன்மை குரு அருளப்பன் கொடியேற்றி வைத்தார். முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் பங்குத்தந்தை மைக்கேல் ராஜ்செல்வம், உதவி பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ, அன்பு இல்ல இயக்குனர் கஸ்மீர் மற்றும் சகாயராஜ், மைக்கேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆலய திருவிழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது.
Related Tags :
Next Story