ஓமலூர், கருப்பூரில்த.மா.கா. கொடியேற்று விழாஜி.கே.வாசன் பங்கேற்பு


ஓமலூர், கருப்பூரில்த.மா.கா. கொடியேற்று விழாஜி.கே.வாசன் பங்கேற்பு
x
சேலம்

ஓமலூர்

மேச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வந்தார். மேச்சேரிக்கு காரில் சென்ற அவருக்கு ஓமலூர் காந்தி சிலை அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காந்தி சிலை அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கொடியேற்று விழா நடந்தது. நகர தலைவர் மணிகண்டன் வரவேற்றார். வட்டார தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமை தாங்கினார். ஜி.கே.வாசன் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

இதேபோல் பச்சனம்பட்டி அருகே சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர் சின்னையன் தலைமையில் ஜி.கே.வாசனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாநில இளைஞரணி செயலாளர் ரகுநந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் பாப்பா சின்னையன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கருப்பூரில் நகர த.மா.கா. சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது, நகர தலைவர் அய்யணன் வரவேற்றார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட தலைவர் செல்வம், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ரகு நந்தகுமார், மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி, மகளிர் அணி தலைவி சிந்தாமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சித்தலைவருமான ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார்.

விழாவில் கருப்பூர் நகர செயலாளர் வையாபுரி, பொருளாளர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாற்று கட்சியினர் 25 பேர் ஜி.கே.வாசன் முன்னிலையில் த.மா.கா.வில் இணைந்தனர். அவர்களுக்கு ஜி.கே.வாசன், சால்வை அணிவித்து வரவேற்றார். முன்னதாக ஜி.கே.வாசனுக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


Next Story