பா.ம.க. கொடி ஏற்று விழா


பா.ம.க. கொடி ஏற்று விழா
x

நல்லம்பள்ளி அருகே பா.ம.க. கொடி ஏற்று விழா நடந்தது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தேங்காமரத்துப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பா.ம.க. 34-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடி ஏற்று விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றிய தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் சசிகலா முனுசாமி, சுப்ரமணி, சின்னசாமி, குமார், கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மின்வாரிய பாட்டாளி தொழிற்சங்க பொது செயலாளர் சின்னசாமி, ஒன்றிய கவுன்சிலர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் வேணுகோபால், முனுசாமி, வையாபுரி, துரை, பெரியசாமி, கோவிந்தராஜ், தேவராஜ், தில்லைவனம், அங்குசாமி, சிவகுமார், சூரியா, திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story