தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்


தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2023 3:54 PM IST (Updated: 3 Oct 2023 7:14 PM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி ெதா.மு.ச.உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி ெதா.மு.ச.உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா அருகில் நேற்று தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் க.சவுந்தர்ராஜன், எஸ்.கே.எம். ஒருங்கிணைப்பாளர் எஸ்.பலராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் கலந்து கொண்டவர்கள், ''அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி.வரியை நீக்க வேண்டும்.

பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் கியாஸ் மீதான வரிகளை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொது வினியோக முறையை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விதை, உரம், மின்சாரத்திற்கான மானியத்தை அதிகரித்திட வேண்டும். விரிவான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எஸ்.கே.எம். ஆகிய தொழிற்சங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story