குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களை போலீசார் வெளியேற்றினர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story