கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பு: 2-வது நாளாக தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:  தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பு:  2-வது நாளாக தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி
x

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. 2-வது நாளாக தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. 2-வது நாளாக தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தரைப்பாலம் மூழ்கியது

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,020 கனஅடியாக இருந்தது. இது நேற்று முன்தினம் வினாடிக்கு 5,932 கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 7,842 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 7,780 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓசூர்- நந்திமங்கலம் சாலையில் உள்ள தரைப்பாலம் 2-வது நாளாக தண்ணீரில் மூழ்கியது.

முள்வேலி

இதனால் தட்டனப்பள்ளி, சித்தனப்பள்ளி ஆகிய கிராம மக்கள் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தரைப்பாலத்தின் வழியாக செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. மேலும் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தட்டனப்பள்ளி, சித்தனப்பள்ளி வழியாக ஓசூருக்கு செல்ல முடியாதபடி கயிறு கட்டியும், முள்வேலி அமைத்து பொதுமக்கள் தடுப்பு வைத்துள்ளனர்.

மேலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக முத்தாலி வழியாக 10 கி.மீட்டர் தூரத்தை கடந்து பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

Next Story