தாம்பரம் மாநகராட்சியில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு பணிகள் - அதிகாரிகள் நேரில் ஆய்வு


தாம்பரம் மாநகராட்சியில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு பணிகள் - அதிகாரிகள் நேரில் ஆய்வு
x

வெள்ளத்தடுப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story