திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி திகழ்கிறது. கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story