காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 25 பேர் வருகை..!


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 25 பேர் வருகை..!
x

பவானியில் குறையாத காவிரி ஆற்று வெள்ளம் காரணமாக 3-வது நாளாக அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

பவானி,

மேட்டூர் அணை நிரம்பி யதை யொட்டி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

இதேபோல் அம்மா பேட்டை, பவானி பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பவானியில் குறையாத காவிரி ஆற்று வெள்ளம் காரணமாக 3-வது நாளாக பவானி மற்றும் அம்மா பேட்டை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் அருகே உள்ள பள்ளி மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தையடுத்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 25 பேர் கொண்ட குழுவினர் ஈரோடு மாவட்டம் பவானிக்கு வந்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள மிதக்கும் படகுகள், மரம் அறுக்குள் எந்திரங்களுடன் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் ஒளிரும் உடையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.


Next Story