கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்கள்


கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:  நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்கள்
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:46 PM GMT)

கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. இதனால் இரவில் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொட்டக்குடி ஆற்றின் இருகரைகளையும் தழுவிக் கொண்டு வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடியது. ஆற்றின் கரையோரம் உள்ள ஜவகர் நகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பூதிப்புரம் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் தேனி ஆற்றங்கரை தெரு, சுப்பன் தெருவில் கொட்டக்குடி ஆற்றின் கரையோரம் வசித்த மக்களும் பாதுகாப்பு கருதி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அந்த மக்களுக்கு உணவு, பாய், போர்வை, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story