தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x

தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கல்வராயன்மலை அடிவாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைப்பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கி உள்ளது.

அதேபோல் கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் செம்மண் நிறத்தில் தண்ணீர் கலங்கலாக ஓடியதை அப்பகுதி மக்கள் கரையோரமாக நின்று பார்த்தனர்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏரி, குளம்போன்ற நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story