கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - சொந்த ஊர் திரும்பியும் தீபாவளி கொண்டாட முடியாத அவலம்


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - சொந்த ஊர் திரும்பியும் தீபாவளி கொண்டாட முடியாத அவலம்
x

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் நேற்று இரவு முதல் வெள்ள நீர் படிப்படியாக உயர்து வருகிறது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் நேற்று இரவு முதல் வெள்ள நீர் படிப்படியாக உயர்ந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக கடலில் கலந்து வருகிறது.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், கரையின் உள்ளே அமைந்துள்ள கிராமங்களுக்கு கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டிற்கு திரும்பிய மக்கள், மீண்டும் உடமைகளுடன் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெளியூர்களில் பணியாற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில், வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதை கண்டு அவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

1 More update

Next Story