சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்


சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்
x

பக்தர்கள் வரும் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தாலோ, அல்லது ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட மாட்டாது என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Story