பெருந்துறை செட்டித்தோப்பு பகுதியில் சாலையில் தேங்கிய வெள்ளம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு


பெருந்துறை செட்டித்தோப்பு பகுதியில் சாலையில் தேங்கிய வெள்ளம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
x

பெருந்துறை செட்டித்தோப்பு பகுதியில் சாலையில் தேங்கிய வெள்ளம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ஈரோடு

பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் வெங்கமேடு செட்டித்தோப்பு பகுதி உள்ளது. இங்கு மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் சாலையில் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெருந்துறையில் ஒரே நாளில் 42 மி.மீட்டர் மழை கொட்டியது. இந்த பெருமழையில் காட்டாறாக ஓடிய வெள்ளம் செட்டித்தோப்பு பகுதியில் சாலையில் குட்டை போல தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று தமிழக வீட்டுவசதித்துறை, மதுவிலக்கு -ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செட்டித்தோப்பு பகுதிக்கு சென்றார். அவருடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் ஆகியோர் இருந்தனர். தண்ணீர் வரும் வழி, நீர் வடிந்து செல்லும் வடிகால்கள், அடைப்புகள் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் இனிமேல் தண்ணீர் தேங்காத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பேரூராட்சி தலைவர்கள் செல்வம் (கருமாண்டிசெல்லிபாளையம்), ராஜேந்திரன் (பெருந்துறை) மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story