திண்டுக்கல் அருகே வீட்டு தோட்டத்தில் பூத்த பிரம்ம கமலம் பூக்கள்


திண்டுக்கல் அருகே வீட்டு தோட்டத்தில் பூத்த பிரம்ம கமலம் பூக்கள்
x
தினத்தந்தி 15 July 2023 9:00 PM GMT (Updated: 15 July 2023 9:00 PM GMT)

திண்டுக்கல் அருகே வீட்டு தோட்டத்தில் பிரம்ம கமலம் பூக்கள் பூத்துள்ளன.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார். சிவக்குமார் தனது வீட்டில் இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூச்செடியை வளர்த்து வருகிறார்.

இந்த செடியில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ நேற்று முன்தினம் இரவு பூத்தது. ஒரே செடியில் 5 பூக்கள் பூத்தன. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். பின்னர் பூவுக்கு தேங்காய், பழம் வைத்து சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபட்டனர்.


Related Tags :
Next Story