பூக்குழி திருவிழா


பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூக்குழி திருவிழா நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை கிராமத்தில் ஆதினமிளகி அய்யனார், அழகியநாயகி அம்மன், ஆனிமுத்து கருப்பர் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையும், பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர். இதனையொட்டி வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சித்ரா பவுர்ணமி விழா கமிட்டியாளர்கள், ஏ.டி.எம்.ஆர். இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர். இதேபோல் திருவாடானை, தொண்டி பகுதியில் உள்ள பனஞ்சாயல் சிலை கட்டியம்மன் கோவில், நம்புதாளை கருப்பர் கோவில், கீழ்க்குடி பெருமாள் பெரியவர் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற்றது.


Next Story