கோவையில் பூக்கள் விலை உயர்வு


கோவையில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பூக்கள் விலை உயர்வு

கோயம்புத்தூர்

ஆர்.எஸ்.புரம்

பங்குனி உத்திரத்தையொட்டி கோவையில் நேற்று பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி ஒரு கிலோ மல்லி, முல்லைப்பூ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூ மார்க்கெட்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூமார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூக்களும், ஓசூர், பெங்களூரு, ஊட்டி பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கட்டான் பூக்களும் வருகிறது.

இதுதவிர சேலத்தில் இருந்தும் அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மல்லிகை, முல்லை, அரளி, குண்டுமல்லி, ரோஜா, செவ்வந்தி என பூக்களை தங்களுக்கு தேவையான பூக்களை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள்.

மல்லி, முல்லைப்பூக்கள் ரூ.1,000

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பூக்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டும், இன்று (புதன்கிழமை) பங்குனி உத்திரத்தையொட்டியும் ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை அதிகரித்து இருந்தது.

இதையடுத்து கோவை பூமார்க்கெட்டில் கடந்த ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800 முதல் ரூ.1,000-க்கும், ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.1,000-க்கும் விற்பனையானது. மற்ற பூக்களும் வழக்கத்தை காட்டிலும் நேற்று விலை உயர்ந்து காணப்பட்டது.

கோவை பூமார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை நிலவரம் கிலோவில் வருமாறு:-

வெயிலால் வரத்து குறைந்தது

செவ்வந்தி ரூ.200, பட்டன் ரோஜா ரூ.180, அரளி ரூ.180, சம்பங்கி ரூ.160, மரிக்கொழுந்து 1 கட்-ரூ.30, காக்காட்டன் பூ ரூ.400, கனகாம்பரம் ரூ.600, செண்டுமல்லி- ரூ.120, தாமரை ஒன்று ரூ.10 முதல் ரூ.15-க்கும் விற்பனையானது. விலை அதிகரித்து இருந்தாலும் பூக்கள் வாங்க மார்கெட்டுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் சென்றனர்.

இது குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, கடும் வெயில் காரணமாக கோவை பூ மார்க்கெட் பூக்களின் வரத்தை குறைந்துள்ளது. தற்போது மகாவீர் ஜெயந்தி, பங்குனி உத்திரம் மற்றும் பன்னாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூக்களின் தேவை அதிக அளவு உள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது என்றனர்.



Next Story