ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் பூச்சொரிதல் விழா


ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் பூச்சொரிதல் விழா
x

ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் பூச்சொரிதல் விழா

மதுரை


ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மன் ஆடி பூக்குழி திருவிழாவில் நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பூச்சொரிதல் விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தி.புதுப்பட்டி சக்திபுரம் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி பூக்குழி திருவிழாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட 41 அடி நீள பூக்குழியில் ஸ்ரீஅம்மா இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

காலை 11 மணிக்கு மேல் 41 அடி உயர மகாசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அம்மனை வலம் வந்தனர்.

வளைகாப்பு நிகழ்ச்சி

திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தேவி கருமாரியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பக்தர்கள் கஞ்சிக் கலயம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு கஞ்சி கலயத்தை ஸ்ரீஅம்மா எடுத்து அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. இதையடுத்து பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலிகயிறு வழங்கப்படுகிறது.

விழாவின் சிறப்பு அம்சமாக 3 நாட்களாக காலை முதல் இரவு வரை கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீட நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.


Next Story