பெருந்துறை பகுதியில் விபத்துகளை தடுக்க 4 வழிச்சாலையில் மேம்பாலங்கள்; ஜார்க்கண்ட் கவர்னரிடம் தோப்பு வெங்கடாசலம் மனு

பெருந்துறை பகுதியில் விபத்துகளை தடுக்க 4 வழிச்சாலையில் மேம்பாலங்கள்; ஜார்க்கண்ட் கவர்னரிடம் தோப்பு வெங்கடாசலம் மனு
x

பெருந்துறை பகுதியில் விபத்துகளை தடுக்க 4 வழிச்சாலையில் மேம்பாலங்கள்; ஜார்க்கண்ட் கவர்னரிடம் தோப்பு வெங்கடாசலம் மனு

ஈரோடு

ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வந்தார். அவரை முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பிரமுகருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது பெருந்துறை பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒரு கோரிக்கை மனுவை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம், முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வழங்கினார்.

அதில், பெருந்துறை -பவானி 4 வழிச்சாலையில் ஏராளமான இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாக பெருந்துறை, ஈரோடு, நசியனூர், சித்தோடு, பவானி செல்லும் வாகனங்கள் வந்து செல்கின்றன. கிராமப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் 4 வழிச்சாலைக்கு வருகின்றன. அதுமட்டுமின்றி, 4 வழிச்சாலையை கடந்து செல்ல வேண்டிய முக்கிய சாலைகளும் அதிகமாக உள்ளன. இந்த ரோடுகள் சந்திக்கும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். முறையாக போதிய மேம்பாலங்கள் அமைக்கப்படாததால் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. இனிமேலும் விபத்துகள் நடக்காத வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மந்திரியின் கவனத்துக்கு எடுத்துச்சென்று மேம்பாலங்கள் கட்டித்தரவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. நிகழ்வின் போது ஆதிபராசக்தி வழிபாட்டு குழு தலைவரும் சமூக ஆர்வலருமான மகேந்திரன் உடன் இருந்தார்.

Related Tags :
Next Story