சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்


சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்
x

பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் அருகே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கலந்து கொண்டு அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

ரூ.10 ஆயிரம் அபராதம்

விபத்துகளை தவிர்த்து பாதுகாப்பான சாலை பயணத்தை மேற்கொள்ள சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிப்பதோடு பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். சாலையின் எதிர் புறமாக வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை மதித்து விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும்.

சீட்பெல்ட்

அதேபோல் காரில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகை விதித்து வசூலிக்கப்படும். விபத்து நேரிடும் போது அருகில் உள்ளவர்கள் வேடிக்கை பார்க்காமல் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story