மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க தொடர் நடவடிக்கை - நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்


மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க தொடர் நடவடிக்கை - நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
x

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை,

மேகதாதுவில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதனைத் தடுக்கவும், அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுக்க மத்திய அரசிடம் முறையிட்டதோடு, மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீர்வளத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story