ஆதரவற்றோருக்கு உணவு, போர்வை
ஜோலார்பேட்டை பகுதியில் ஆதரவற்றோருக்கு உணவு, போர்வைகளை போலீசார் வழங்கினர்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காதர்கான் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் அரசு, நிலைய எழுத்தர் ரகுராமன், போலீஸ்காரர் நந்தினி உள்ளிட்ட போலீசார் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் ஆதரவற்று சுற்றி தெரியும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான போர்வை, உணவுதண்ணீர் போன்றவற்றை வழங்கி வந்தனர்.
இந்தநிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள சுற்றுப்பகுதியில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு, போர்வையின்றி உள்ளவர்களை கண்டறிந்து போர்வை வழங்கி வருகின்றனர். மேலும் புது ஓட்டல் தெரு பகுதியில் ஆதரவின்றி தவித்த மாற்றுத்திறனாளி, ஆதரவற்றவர்களுக்கு போர்வை, உணவு மற்றும் குடிநீர் வழங்கினர்.
Related Tags :
Next Story