ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை


ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
x

அறந்தாங்கியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் 10 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

10 கிலோ இறைச்சி பறிமுதல்

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்த சம்பவத்தை தொடா்ந்து அறந்தாங்கி நகரின் பஸ் நிலையம், கட்டுமாவடி முக்கம், பெரிய கடை வீதி, புதுக்கோட்டை சாலை உள்ளிட்ட இ்டங்களில் உள்ள ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் இறைச்சி மற்றும் சவர்மா, சிக்கன் ரைஸ், சிக்கன் உள்ளிட்டவைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜேம்ஸ் தலைமையில் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஓட்டல்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுவையூட்டும் வண்ணங்களில் மசாலாக்களை சேர்த்த இறைச்சி 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

அழித்தனர்

இதேபோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ஒவ்வொரு ஓட்டல்களில் முறையான, சுகாதாரமான உணவுகளை தயாரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர்.


Next Story