செஞ்சியில்உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு முகாம்

செஞ்சியில் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு முகாம் நடைபெற்றது.
செஞ்சி,
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் செஞ்சியில் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு முகாம் நடைபெற்றது. செஞ்சி தாலுகா வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் கலியமூர்த்தி, செயலாளர் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அம்ஜத் பாண்டே வரவேற்றார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் பத்மநாபன் கலந்து கொண்டு ஓட்டல், இனிப்பகம், பேக்கரி, பழ கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதன் அவசியம் குறித்து பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புதியதாக உரிமம் பெற மனு அளித்தனர். முகாமில் செஞ்சி தாலுகா வர்த்தகர் சங்க துணைத் தலைவர்கள் ராஜகோபால், மணிகண்டன், துணை செயலாளர்கள் சையத் ஷப்பீர், சுமங்கலி ரவி, சுபேர், நிர்வாகிகள் செல்வானந்தம், கவர்னர், காதர், சேட்டு, இந்தியன் வங்கி அலுவலர்கள் புவனேஷ், முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






