சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியன் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானை யூனியன் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் செல்வகுமார் சிறப்புரையாற்றினர். இதில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒன்றிய தலைவர் செல்வம், செயலாளர் ராசு, மாநில செயற்குழு உறுப்பினர் தனலெட்சுமி உள்பட 100-க்கு மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story