சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
ஊட்டி
காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசே சத்துணவு ஊழியர்களைக்கொண்டு நடத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தால் பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தலைவர் சுஜாதா தலைமை தாங்கினார். செயலாளர் செல்லதுரை, பொருளாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.6,750-ஐ அகவிலை படியுடன் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story