சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேவகோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேவகோட்டை,
தேவகோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காலி பணியிடம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தேவகோட்டை யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது தங்களது கோரிக்கைகளான காலி பணியிடத்தை நிரப்ப கோரியும், காலை உணவை தமிழக அரசு சத்துணவு ஊழியர்களை வைத்தே செயல்படுத்த வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளர்களை அரசு துறையில் இருக்கின்ற அனைத்து காலி பணியிடத்திலும் நிரப்ப வேண்டும்.
சத்துணவு ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்த வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 750 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர் சங்க தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். கலாவதி, ஜெயமேரி, முன்னிலை வகித்தனர். மகாலட்சுமி கோரிக்கை பற்றி விளக்கி பேசினார். ராஜேஸ்வரி, கோமதி, இருதயமேரி, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் ரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் மிக்கேலம்மாள் சிறப்புரையாற்றினார். ஒன்றிய பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
கூட்டத்தில் செல்வராணி, கவிதா, சுமதி, ராஜலட்சுமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.