சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம், மாவட்ட மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகளை அந்தந்த பள்ளி சத்துணவு மையத்திலேயே இறக்க வேண்டும், பத்து, இருபது, முப்பது ஆண்டுகள் பணியாற்றிய சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், பள்ளி சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் உணவூட்டுச்செலவின தொகையை கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாததை உடனடியாக வழங்க வேண்டும், பள்ளி சத்துணவு மையங்களில் பயன்படுத்தப்படும் எரி பொருள் (கியாஸ், சிலிண்டர்) விலை வாசி உயர்வில் அரசு நிர்ணயத்த தொகை பற்றாக்குறையாக உள்ளதால் கியாஸ் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.