சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், தமிழக முதல்-அமைச்சர், சத்துணவு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் துரை, காசி, ரீட்டாமேரி, இணை செயலாளர்கள் மோகனா, வெண்மதி, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வீமன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தொடக்க உரையாற்றினார். செயலாளர் தேசிங்கு, கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் ஜெயந்தி சிறப்புரையாற்றினார். இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் மூர்த்தி நிறைவுரையாற்றினார்.
தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கோஷம் எழுப்பியவாறு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சத்யா நன்றி கூறினார்.