கோத்தகிரியில் கால்பந்து இறுதிப் போட்டி

கோத்தகிரியில் கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரியில் கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது.
கால்பந்து இறுதிப் போட்டி
கோத்தகிரி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கேர்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளி ஏற்று நடத்தி வருகிறது. இதில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 45 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவுக்கான கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் கக்குச்சி மகாத்மா காந்தி பள்ளி அணி மற்றும் விஸ்வ சாந்தி பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் போட்டி தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தி விளையாடிய மகாத்மா காந்தி பள்ளி அணி 5 கோல்கள் போட்டு வெற்றி பெற்றது.
மாவட்ட போட்டிக்கு தகுதி
இதேபோல 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கேர்கம்பை ஹில்போர்ட் பள்ளி மற்றும் நெடுகுளா அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் விளையாடின. இதில் ஹில்போர்ட் பள்ளி அணி 3-0 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆல்பா ஜி கே பள்ளி அணி மற்றும் ஹில்போர்ட் பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின. இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதியில் ஹில் போர்ட் அணி ஒரு கோல் போட்டது. இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆல்பா ஜி கே அணி கோல் அடித்து சமன் செய்தது. இதனைத் நடந்த டை பிரேக்கரில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் ஹில்போர்ட் பள்ளி அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.






