1,913 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


1,913 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

ஜோலார்பேட்டை தொகுதியில் 19 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,913 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

திருப்பத்தூர்

சைக்கிள் வழங்கும் விழா

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 19 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1,913 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி முன்னிலை வகித்தார்.

வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 7 பள்ளிகளுக்கும், தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 பள்ளிகளுக்கும் என மொத்தம் 19 மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 1,913 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்கலெக்டர் பேசுயதாவது:-

உலகத்தையே மாற்றும் ஆயுதம் கல்வி

இந்த உலகத்தையே மாற்றக்கூடிய ஆயுதம் என்றால் அது கல்வி தான். கல்வி என்பது மதிப்பெண் எடுப்பதற்கு மட்டும் அல்ல. கல்வியின் முக்கிய நோக்கமே சிந்திக்க கற்றுக் கொடுப்பதுதான். சிந்திக்க தெரிந்த மனிதன் ஒருவர் இருந்தால் போதும், அவர் பின்னாடி ஒரு நாடே இருக்கும். எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் பாடம் குறித்து கேள்விகளை கேளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்ராயன், மாவட்ட கல்வி அலுவலர் ரவி, ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், நகரமன்ற தலைவர் காவியா விக்டர், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், நகர செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story