ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு90 சதவீத மானியத்தில் 1,000 மின்இணைப்புகள்:இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு90 சதவீத மானியத்தில் 1,000 மின்இணைப்புகள்:இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் 1,000 மின் இணைப்புகள் வழங்கப்படுவதால் தகுதியானவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

மின் இணைப்பு

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்தில் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையிலும் மொத்தம் 1,000 மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

15 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சத்துக்கான 10 சதவீத பங்குத் தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மின் இணைப்பு வேண்டி, தாட்கோ மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும். தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத் தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே மின் இணைப்பு கோரி, காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல் 'அ' பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story