வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குசிறுபான்மையின மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்;ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குசிறுபான்மையின மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்;ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x

வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

ஈரோடு

வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திராவிட மாடல் ஆட்சி

பெந்தேகொஸ்தே திருச்சபைகளின் மாமன்ற கூட்டம் ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துசாமி, கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்களிடம் திருச்சபை நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கூறியதாவது:-

ஈரோட்டில் 85 திருச்சபைகள் உள்ளன. ஈரோட்டுக்கும், தி.மு.க.வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. திராவிட இயக்கத்தின் முதல் தலைமுறையாக விளங்குபவர் பெரியார்.

தற்போது திராவிட இயக்கத்தின் 4-வது தலைமுறை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் துணையாக இருக்கும்.

பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். எனவே அவருக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாய்ப்பு

கூட்டத்தில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும் போது கூறியதாவது:-

என்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தியபோது பன்முகத்தன்மை கொண்டவர் என்று கூறினர். நான் பன்முகத்தை கொண்டவர் மட்டுமல்ல. நல்ல பண்பு கொண்டவன்.

ஏனெனில் நான் ஆரம்பத்தில் இருந்தே கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் படித்து மேலே வந்தவன். மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவன். மதம் என்ற பெயரால் மனிதர்களை பிரிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன். சாதி, மத வேறுபாடின்றி மனிதர்களாக வாழ வேண்டும்.

ஈரோடு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைத்து உள்ளது. நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதைவிட கெட்ட பெயர் எடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story