கட்டுமான தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்


கட்டுமான தொழிலாளர்களுக்கு  மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்
x

கட்டுமான தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் தமிழ்மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

கடலூர்

கடலூர்

தமிழ் மாநில கட்டிடத்தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அஞ்சாபுலி வரவேற்றார். அரியலூர் மாவட்ட செயலாளர் கொளஞ்சிநாதன், கடலூர் மாவட்ட துணை தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முத்தையன், பொருளாளர் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சட்ட ஆலோசகர் பிரபுமுத்து, மாநில துணை தலைவர்கள் முருகன், சிவக்குமார், துணை செயலாளர்கள் ருத்ராபதி, கணேசன், மதுரை மாவட்ட செயலாளர் பாலமுருகன், நாகை மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்க மாவட்ட தேர்தல் நடந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் துரை நன்றி கூறினார்.


Next Story