மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி விஷம் குடித்தார்


மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி விஷம் குடித்தார்
x

களக்காடு அருகே கடன் பிரச்சினையில் மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே கடன் பிரச்சினையில் மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம் நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 32), கூலி தொழிலாளி. இவர் தனது குடும்ப செலவுக்காக கடந்த ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் ரூ.2,500 வட்டி செலுத்தி வந்தார். இந்த மாதம் வட்டி செலுத்தவில்லை.

இதையடுத்து அந்த பெண் இசக்கி வீட்டுக்கு சென்று, அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம் (25) வட்டி கேட்டு அவதூறாக பேசி உள்ளார். இதுபற்றி எஸ்தர் மரியா தனது கணவர் இசக்கியிடம் கூறவே, அவர் அந்த பெண்ணிடம் தட்டிக்கேட்டார். அப்போது அந்த பெண் இசக்கியின் மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

விஷம் குடித்தார்

இதுகுறித்து இசக்கி களக்காடு போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் கடன் ெகாடுத்தவர், தனது மனைவி குறித்து அவதூறாக பேசியதால் மனவேதனை அடைந்த இசக்கி வீ்ட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென விஷம் குடித்தார்.

இதில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இசக்கிக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளனர். கடன் பிரச்சினையில் தனது மனைவி குறித்து அவதூறாக பேசியதால் மனம் உடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story