கோவிலுக்கு நன்கொடை தராததால் த.மா.கா. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு


கோவிலுக்கு நன்கொடை தராததால் த.மா.கா. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
x

கோவிலுக்கு நன்கொடை தராததால் த.மா.கா. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை

கொளத்தூர் ஹரிதாஸ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மத்திய சென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் இவரிடம் வேளாங்கண்ணி கோவிலுக்கு மாலை போட்டு செல்வதற்காக நன்கொடையாக ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் பணம் தர மறுக்கவே, நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிற்கு சென்ற 4 பேர் அவரது வீட்டு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து சேதப்படுத்தினர்.

பின்னர் அங்கு வந்த முகுந்தனை கத்தியால் முகத்தில் வெட்டி காயப்படுத்தினர். பலத்த காயமடைந்த முகுந்தன் கொளத்தூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாது, விமல், ரமேஷ் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.அதேபோல் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 7-வது பிளாக்கை சேர்ந்தவர் விஷால் (21). இவர் நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த விஜய் என்பவர் கத்தியால் விஷாலை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை தேடி வருகின்றனர்.


Next Story