அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம்-அன்னூர் அருகே பரபரப்பு


அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால்  மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம்-அன்னூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அன்னூர் அருகே அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

அன்னூர்

அன்னூர் அருகே அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடக்கம் செய்ய எதிர்ப்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காரை கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னக்கரசன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது 102). இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காரை கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் உள்ள பொது மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது இந்த இடத்திற்கு வந்த மற்றொரு தரப்பினர் இங்கே ஏற்கனவே பால ஏற்பாடுகள் நடைபெறுவதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று கூறினார்கள்.

போராட்டம்

இதனால் பொதுமக்கள், இறந்த மூதாட்டியின் உடலை சாலையின் நடுவில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் இதுபற்றி அறிந்ததும் அன்னூர் தாசில்தார் தங்கராஜ், கோவை வடக்கு ஆர்.டி.ஓ. பூமா, கோவை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, காரை கவுண்டன்பாளையம் ஊராட்சி தலைவர் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து மூதாட்டியின் உடல் குரும்பபாளையத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story