பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி
சாத்தான்குளத்தில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உட்பட்ட போலீஸ் துறை சார்பில் சாத்தான்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார் இதில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராயஸ்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம், கொம்மட்டிக்கோட்டை, நாசரேத் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இதில், சாத்தான்குளம், தட்டார் மடம், நாசரேத், மெஞ்ஞானபுரம் போலீசாரும், பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.