தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

கரூர் மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

திறனறி தேர்வு

பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதை போன்று தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.2023-24-ம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மாவட்ட தலைநகரங்களில்..

இத்தேர்வில் 50 சதவீதம் அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்திற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கலாம்

2023-24-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்பட) 11-ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த மாதம் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 20-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம், முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும்.மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story