நெல்லை மருத்துவ கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக பொது மருத்துவ துறையில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

நெல்லை மருத்துவ கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக பொது மருத்துவ துறையில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
x

நெல்லை மருத்துவ கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக பொது மருத்துவ துறை தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை மருத்துவ கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக பொது மருத்துவ துறை தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி சாதனை

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் பொது மருத்துவ துறை இறுதி ஆண்டு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், அதாவது 100 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த கல்லூரி வரலாற்றில் இது முதன்முறையாகும்.

மேலும் இதில் 30 மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். ஆர்த்தி சக்தி பாலா, முகமது முகஜிர் அன்சாரி முஜீப், ரம்யா, ஜலீலா அப்ராதசீம், நந்தினி, சந்தீப்குமார், காவியா, ருபினா ஆகிய 8 பேர் 80 சதவீதத்துக்கு மேலும், 22 பேர் 75 சதவீதத்துக்கும் மேலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பாராட்டு

இதையொட்டி கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் நேற்று மாணவ-மாணவிகளை பாராட்டி விருது, சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

மேலும் இறுதி ஆண்டு தேர்ச்சி பெற்ற பயிற்சி டாக்டர்களுக்கு, வருங்காலத்தில் எவ்வாறு சமுதாயத்துக்கு பணியாற்ற வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் கல்லூரி துணை முதல்வர் சுரேஷ் துரை, மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மருத்துவ துணை கண்காணிப்பாளர் முகமது ரபீக் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story